சங்கரன்கோவிலில் இளைஞர் வெட்டி படுகொலை. ஒரு சில வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு. முன்விரோதம் காரணமா? என காவல்துறையினர் விசாரணை.
தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் திருவிக தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன் (23). லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டுக்கு வராத நிலையில் தாமதமாக வீட்டுக்கு வந்து விடுவான் என குடும்பத்தினர் நினைத்திருந்துள்ளனர். இன்று காலை வரை வீட்டுக்கு மாரியப்பன் வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பகுதியில் தேட ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து தகவல் காவல்துறையினருக்கும் தெரிய வர அப்பகுதியிலும் சுற்றுப் பகுதிகளிலும் தேடியுள்ளனர்.
அப்போது ஒடைத் தெரு அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கிணற்றின் அருகே அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்துடன் மாரியப்பனின் உடலை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். உடனடியாக உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!
அதைப் போல பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கடைசியாக வந்து சென்ற நேரம் குறித்தும் அவருடன் சென்ற நண்பர்கள் குறித்தும் தகவல்களை காவல்துறையினர் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.
வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு ஒரு சில வாரங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நடத்து முடிந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது....
இதையும் படிங்க: கோவையில் மீண்டும் அதிர்ச்சி... கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்த இளைஞர் கொலை? - பகீர் பின்னணி...!