மதுரை எஸ்.எஸ்.காலனியில் நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் டெபாசிட்களுக்கு கூடுதல் வட்டி தருவதாக தெரிவித்ததன் அடிப்படையில் பல ஆயிரம் பேர் பல லட்சம் ரூபாயை நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பெயரில் டெபாசிட் செய்தனர். பணத்தை திரும்ப செலுத்தாத நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் மீது புகார்கள் குவிந்தன. போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: புகழின் உச்சியில் நடிகர் சூரி; கொலை மிரட்டல் விடுத்த தம்பி.. ஆட்சியர் வரை சென்ற புகார்!!

மேலும், பணத்தை இழந்தவர்களுக்கு இதுவரை 10% நிதி கூட கொடுக்கப்படாத வேதனை அளிப்பதாகவும் கூறினார். மேலும் மோசடி வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தொகையை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை செல்லும் விஜய்... பூத் கமிட்டி மாநாடா? சித்திரை திருவிழாவுக்கா? வெளியானது முக்கிய அப்டேட்!!