சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மீது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். பத்து சவரன் நகை அவர் திருடியதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், தாங்கள் காரில் வந்ததாகவும் காரை அஜித்குமார் பார்க் செய்துவிட்டு வருவதாக கூறியிருந்ததாகவும் தனது தாய்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்ததால் நகைகளை கழட்டி காரில் வைத்து விட்டு வந்ததாகவும் கூறினார். சாமி கும்பிட்டு விட்டு காரில் சென்ற போது நகையை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலுக்கு வந்து புகார் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி இருந்த நிலையில், ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு நிகிதா மீது பண மோசடி வழக்கு இருப்பதும், 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாங்கி தருவதாக கூறி இலட்சக்கணக்கில் நிகிதா பண மோசடி செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்.. சிபிஐ திடீரென மனமாற்றம்..!
திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி வரும் நிகிதா மீது கல்லூரி மாணவிகளும் புகார் அளித்திருந்ததும் தெரியவந்துள்ளது. அவரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும், ஏற்கனவே பண மோசடி உள்ளிட்ட புகார்கள் அவர் மீது இருக்கும் நிலையில், கல்லூரி மாணவிகளும் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

உண்மையிலேயே நகை திருட்டு நடந்ததா, அல்லது நிகிதா பொய் புகார் கூறினாரா, வேண்டுமென்றே அஜித் மீது திருட்டு பட்டம் சுமத்தி இருக்கிறாரா, நிகிதாவுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அஜித் குமார் மரண வடக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட சூழலில் நிகிதா மற்றும் அவரது தாயார் சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.
இந்த நிலையில், அஜித் குமார் இறப்பிற்கு தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் , அழுததாகவும், அழுது கொண்டே இருப்பதாக நிகிதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் குமார் குறித்தும் நகை திருட்டு தொடர்பாகவும் நிகிதா பேசிய வீடியோக்கள் வெளியாகி இருந்தன. அதில் கூட அஜித்குமார் மரணத்திற்கு தான் மிகவும் வருத்தப்படுவதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அஜித்குமார் கொலை வழக்கு.. தீவிரமாகும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!