மாநில அரசின் உரிமையை பறிக்கவில்லை என்றால் கடிதத்தை பொதுவெளியில் வெளியிடுங்கள் என்று நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை பறிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை என்று நிதியமைச்சர் தெரிவித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றும் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும் தெரிவித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அப்படி அதனை யாரும் பறிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் சவாலை ஏற்று ஊக்கத்தொகை சர்ச்சை எழுந்ததால் மத்திய அரசு தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். கடிதத்தை வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டிருந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!