திருப்பூரில் மது போதையில் சிறப்பு காவல் ஆய்வாளர் சமூகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகளை பல்வேறு தரப்பினர் முன்வைத்த வருகின்றனர்.
சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் துயரத்தையும் மனவேதனையும் ஏற்படுத்துவதாக கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் பட்ட பகலில் படுகொலைகள், கொள்ளைகள், போதை கலாச்சாரம், பாலியல் துன்புறுத்தல்கள் என சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் அன்றாட தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். பெரும்பாலான சட்டம் ஒழுங்கு சீரழிவுகளுக்கு மூல காரணமே மது தான் என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பரிதவிக்கும் மக்கள்.. பல் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க மனசு வரலையா? விளாசிய ஓபிஎஸ்..!

இதன் காரணமாக, வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மொத்தத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளதாகவும், காவல்துறையினரையே தாக்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு ஏற்படுகிறது என்றால் அந்த அளவுக்கு மென்மையான போக்கினை திமுக அரசு கடைபிடிப்பதாகவும் சாடினார்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்த ஓபிஎஸ், இதற்கு முழு காரணம் திமுக அரசின் நிர்வாக திறமையின்மை தான் என்றும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொறுப்பும் கொலை விரித் தாக்குதலுக்கு மூல காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்க வேண்டிய கடமையும் திமுக அரசிற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இனி வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழாமல் இருக்கவும், உயிரிழப்புகளுக்கு மூலக் காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: என்மேல தப்பு இல்லங்க... மறுக்கும் நயினார்! ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ்.