அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என திமுக அரசு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் நிதிநிலை அறிக்கையில் கூட பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் பட்ஜெட்டில் கூட எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதை அடுத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற தொடர்ந்து கோரிக்கையை வைத்து வந்தனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஜனவரி ஆறாம் தேதி மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ அமைப்புகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதியம் vs புதிய ஓய்வூதியம்... ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை...!
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். TAMIL NADU ASSURED PENSION SCHEME - TAPS செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 50 சதவீதத்தில் பத்து சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதியம்..! அரசு ஊழியர்களின் கோரிக்கை... அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை...!
மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக் காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு முன்னதாக கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.