ஓசூர் அருகே பெயிண்டிங் காண்டிராக்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடிகள் கஜா, எதுபூஷன் ரெட்டி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி ஓசூர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே உள்ள பெல்லூரை சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகன் லோகேஷ். என்கிற புல்லட் லோகேஷ், பெயிண்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவரும் தளி அருகே உள்ள குருபரப்பள்ளியை சேர்ந்த கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எதுபூஷன்ரெட்டி , இவர்கள் இருவரும் நண்பர்கள்.வஇந்த நிலையில் கடந்த 23.05.2021 அன்று இரவு 11.30 மணி அளவில் லோகேஷ் வீட்டிற்கு ரவுடி எதுபூஷன் ரெட்டி, தளி கொத்தனூர் பல்லேரிப்பள்ளியை சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன் ஆகிய 2 பேரும் காரில் வந்தனர். அப்போது எதுபூஷன்ரெட்டி புதியதாக வீடு கட்டி வருவதாகவும், ரூ.5 லட்சம் தனக்கு தருமாறு லோகேசிடம் கூறினார். இதற்கு லோகேஷ் பணம் தர மறுக்கவே எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் (பிஸ்டல்) லோகேசை சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படுகிறது
இதையும் படிங்க: உடலை வாங்கிக்கிறோம்! ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் பெற்றோர் சம்மதம்...
இது தொடர்பாக தளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரவுடிகள் எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ரவுடிகள் எதுபூஷன் ரெட்டி, கஜா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத் தொடர்ந்து ரவுடிகள் 2 பேரையும் போலீஸார் சேலம் மத்திய சிறை சாலைக்கு அழைத்துச் சென்றனர்
பிரபல ரவுடி இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதை அறிந்ததை அவர்களுடைய ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர் இதை அடுத்து ஓசூர் காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு ஆதரவாளர்களை கலைந்து போக சொல்லும்படி அறிவுறுத்தினர் இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
இதையும் படிங்க: ஆணவ படுகொலை..! நீதி கேட்டு வலுக்கும் எதிர்ப்பு.. எஸ்.ஐ தம்பதி சஸ்பெண்ட்..!