பரிதாபங்கள் எனும் youtube சேனலில் பல்வேறு விவகாரங்களை கன்டென்ட் ஆக தயார் செய்து வீடியோக்களை உருவாக்கி வழங்குவார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பற்றியும் குடும்பத்தில் நடக்கும் விவகாரங்கள் தொடர்பாகவும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறிப்பிட்டும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் வீடியோவாக தயாரித்து வழங்குவார்கள்.
சில வீடியோக்கள் சமூக பிரச்சனைகளை பற்றி பேசும்போது அதற்கு எதிர்ப்புக் கிளம்பும். அப்போது மன்னிப்பு கேட்டு அந்த வீடியோக்களை நீக்கியும் இருக்கிறார்கள். பலரது மனதைக் கவர்ந்த இந்த youtube சேனலில் வரும் வீடியோக்களுக்கு ஏராளமானோர் அடிமை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது பரிதாபங்கள் youtube சேனல் 6 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இந்த youtube சேனலுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை மையமாகக் கொண்டு ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது. சொசைட்டி பரிதாபங்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவானது ஏராளமானவரிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சுர்ஜித் ARREST ஆனதுல வருத்தம்! எச்ச நாய்களா… பரிதாபங்கள் சேனலை கிழித்த ஏ.எம்.சவுத்ரி..!
சுதாகர் மற்றும் கோபி உள்ளிட்டூர் இணைந்து நடித்துள்ள இந்த வீடியோவில் வரும் கன்டென்ட் இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் இருப்பதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் பதிவு செய்யப்பட்டது. பரிதாபங்கள் youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெல்லை ஆணவ படுகொலை சம்பவத்தில் இரு சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை சித்தரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், கோபி மற்றும் சுதாகருக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களது கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை காவல் மாநகர ஆணையரகத்தில் திராவிட விடுதலை கழகத்தினர் மனு கொடுத்துள்ளனர். மேலும் கோபி மற்றும் சுதாகருக்கு எம். ஆர். ராதா விருது வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் தான் ஆட்சி செய்றாரு! அரசு தரப்பு விளக்கத்தை கேட்டு ஷாக் ஆன நீதிபதி...