திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்த பாலமுருகன் (45 ) . இவருக்கு மனைவி நிர்மலா மற்றும் ஜெயஸ்ரீ, சொர்ணஸ்ரீ, மகன் நீலகண்டன் என மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் துணை தலைவராக ஒரு முறையும், தலைவராக மூன்று முறையும் இருந்துள்ளார். அதிமுக கிளை செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது 12.50 மணியளவில் அருகில் உள்ள டிரான்ஸ்பரத்திலிருந்து மின் நிறுத்தம் செய்யப்பட்ட அடுத்த நிமிடம் பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் வீட்டின் முன்பு நாட்டு வெடியை எடுத்து வீசியுள்ளனர்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியுமா.? பழைய ரெக்கார்டுகள் என்ன சொல்கின்றன.?

நாய்கள் குறைக்கவே வெளியில் ஓடி வந்து யார் என்று கேட்பதற்குள் பைக்கில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனராம். அடுத்த கால் மணி நேரத்தில் டிரான்ஸ்பரத்திலிருந்து மின் வினியோகம் நடந்துள்ளது. எதிர்பாராத விதமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் சற்று நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவர் தலைவராக இருந்து தற்போது எவ்வித பதவிலும் இல்லாத நிலையில் முன்விரோதம் காரணமாகவா? அல்லது இவரை கொலை செய்யும் விதமாக நாட்டு வெடியை வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தடய அறிவியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏதேனும் தடயம் கிடைக்கின்றதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 2026இல் அதிமுக - பாஜக ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் தாறுமாறு கணிப்பு.!!