கடந்த மாதம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் பொறுப்பிலிருந்து மருத்துவர் அன்புமணி ராமதாசை நீக்கிவிட்டு செயல் தலைவராக அவரை நியமனம் செய்வதாக ராமதாஸ் அறிவிப்பினை வெளியிட்டதில் இருந்தே பாமகவில் உரிமைப்போர் உச்ச கட்டம் அடைந்து வருகிறது. இடையில் தைலாபுரத்தில் கூடிய குடும்பத்தினர் ராமதாஸை சமாதானம் செய்ததாக கூறப்பட்டது. நானே தலைவராக செயல்படுவேன் என தடாலடியாக அறிவித்த அன்புமணி, சித்திரை முழு நிலவு மாநாட்டிலும் முன்னால் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தே வன்னியர் மாநாட்டில் பங்கேற்றனர். அப்போதும் கூட கூட்டணி தொடர்பாக இருவரும் வேறு, வேறு மாதிரியான கருத்துக்களை கூறியது தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியதோடு, அப்பா - மகன் இடையிலான பிரச்சனை நீருபூத்த நெருப்பாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவுடனும், அன்புமணி பாஜகவுடனும் கூட்டணி அமைக்க வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் இன்று அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணிக்கு ராமதாஸ் அழைப்புவிடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த கூட்டம் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அன்புமணி ராமதாசை அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: பாமகவில் ஓங்கும் அன்புமணியின் கை..! கழட்டி விடப்படுகிறாரா ராமதாஸ்?

மேலும் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை எட்டு நாட்கள் மகளிர் சங்கம், வன்னியர் சங்கம் ,சமூக நீதிப் பேரவை, மாநில துணைத்தலைவர்கள் , ஊடக பிரிவு என தனித்தனியாக எட்டு நாட்கள் நிர்வாகிகள் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். கடந்த 11 ஆம் தேதியே மகாபலிபுரம் மாநாட்டில் பேசிய ராமதாஸ் எனக்கு வயது ஆகவில்லை. எல்லாம் தைலாபுரம் வாருங்கள் என்று பேசியிருந்தார்.

பாமக வலுவாக உள்ளதாக சொல்லப்படும் வடமாவட்டங்களை சேர்ந்த பாமக நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ் கூட்டியுள்ள மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் புறக்கணித்துள்ளனர். மொத்தம் உள்ள 182 மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்களில் தற்போது வரை 30 நிர்வாகிகள் தைலாபுரம் வந்துள்ளனர். மூன்றில் ஒரு பங்கினர் கூட தற்போது வரை வரவில்லை. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேகநாதன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் பி ஜி அண்ணாமலை, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தலைவர் தியாகராஜ நாயுடு, பாமக மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே நிறுவனர் ராமதாஸுக்கு வயதாகிவிட்டதால், அன்புமணியின் பேச்சையே பெரும்பாலான நிர்வாகிகள் கேட்க முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அது அடிமைத்தனத்தை தகர்த்தெறியக் கூடிய சொல்... அன்புமணிக்கு திருமாவளவன் பதிலடி!!