• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கர்நாடகம், கேரளம் செய்வதை உங்களால் செய்ய முடியாதா..? முதல்வர் ஸ்டாலினை குடையும் அன்புமணி ராமதாஸ்.!

    கர்நாடகம், கேரளம் போல ரயில்வே திட்டங்களுக்கான செலவுகளை ரயில்வேத் துறையுடன் தமிழக அரசும் பகிர்ந்துகொண்டு பணிகளை விரைவாக முடிக்க முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Jagatheswari Sat, 08 Mar 2025 19:29:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk leader Anbumani Ramadoss slam Tamil nadu government on Railway schemes bending work

    இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 புதிய ரயில்வே பாதைத் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், அவற்றின் மொத்த மதிப்பில் 50 விழுக்காட்டை அம்மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். இதனால், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டப் பணிகள் முன்கூட்டியே நிறைவேற்றி முடிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற முன்முயற்சிகளை மேற்கொள்ள தமிழகத்தை ஆளும் திமுக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

    Anbumani Ramadoss


    கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநிலத்தின் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் சித்தராமய்யா, கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ரயில்வே பாதை அமைக்கும் திட்டங்களில் 9 திட்டங்களின் மதிப்பில் 50 விழுக்காட்டை கர்நாடக மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.16,235 என்றும், அதில் 60% தொகையான ரூ.9,847 கோடியை கர்நாடகம் வழங்கும்; 7 திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதற்கான செலவு முழுவதையும் தமது அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது வரவேற்கத்தக்கது.

    இதையும் படிங்க: புதுசா பாஸ்போர்ட் எடுக்கப்போறீங்களா..! மத்திய அரசின் புதிய விதிகளை தெரிஞ்சுகோங்க..!

    Anbumani Ramadoss

    தமிழ்நாட்டிலும் ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த, அவற்றின் திட்டச் செலவை மத்திய அரசுடன் தமிழக அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் இந்தக் கொள்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் அரசு ரயில்வே பாதை அமைப்பதற்கான திட்டச் செலவை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகின்றன. தமிழகத்தில் ரயில்வே பாதைத் திட்டங்கள் மிகவும் மந்தமாக நடைபெறுவதற்கு இது தான் காரணம் ஆகும்.
    பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் ரயில்வே அமைச்சர்களாக இருந்த போதுதான் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்களின் காலத்தில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 1990களிலும், 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் அறிவிக்கப்பட்ட பல புதிய ரயில்வே பாதைகள் இன்னும் செயல்படுத்தி முடிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.

    Anbumani Ramadoss


    தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 10 புதிய ரயில்வே பாதை திட்டங்கள், 9 இரட்டைப் பாதைத் திட்டங்கள், 3 அகலப்பாதைத் திட்டங்கள் என மொத்தம் 22 திட்டங்கள் ரூ.33,467 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.7,154 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. எனினும், புதிய பாதைத் திட்டங்களில் வெறும் 2.75% பணிகளும், இரட்டைப் பாதைத் திட்டங்களில் வெறும் 3.82% பணிகளும் மட்டும்தான் இதுவரை முடிவடைந்துள்ளன.
    2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், ரயில்வே பாதை திட்டங்களுக்கு வெறும் ரூ.1536 கோடி மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விலைவாசி அதிகரிப்பால் திட்டச் செலவில் ஏற்படும் உயர்வை ஈடு செய்வதற்குக்கூட போதுமானதல்ல. இதே நிலை நீடித்தால் இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும்கூட தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பே கிடையாது.

    Anbumani Ramadoss


    தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தடையாக உள்ள இன்னொரு சிக்கல் நிலங்களை கையகப்படுத்துவது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 3389 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், 866 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இன்னும் 74%, அதாவது 2523 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தித் தர வேண்டியுள்ளது. தருமபுரி, மொரப்பூர், தஞ்சாவூர் ,பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, அத்திப்பட்டு, புத்தூர் ஆகிய புதிய பாதைகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. திண்டிவனம், திருவண்ணாமலை புதிய பாதைத் திட்டத்திற்கு இன்னும் 90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டுக்கான புதிய ரயில்வே பாதைத் திட்டங்கள் அனைத்தும் கனவுத் திட்டங்களாகவே நீடித்துக் கொண்டிருக்கும்.


    தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை தமிழக அரசே கையகப்படுத்திக் கொடுப்பதுடன், முதன்மையான சில திட்டங்களுக்கான செலவையும் பகிர்ந்து கொண்டால், ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்க முடியும். நிலுவையில் உள்ள ரயில்வே பாதை விரைவாக செயல்படுத்தி முடிக்கப்பட்டால், அதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் வளர்ச்சியின் மதிப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழக அரசு செய்யும் முதலீடு ஒரு பொருட்டாகவே இருக்காது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவு இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் இல்லாவிட்டாலும், அடுத்த சில ஆண்டுகளிலாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு இத்தகைய நடவடிக்கைகள் தேவையாகும்.

    Anbumani Ramadoss
    கர்நாடகம் மட்டுமின்றி, கேரளமும் பல ரயில்வே திட்டங்களுக்கான செலவுகளை ரயில்வே துறையுடன் பகிர்ந்து கொள்கிறது. இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, முதன்மையான ரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அதன்மூலம் தமிழக ரயில்வே திட்டங்களை விரைவுப்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும்” என்று அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்த கர்நாடகா அடங்கவே அடங்காதா..? மீண்டும் எரியத் தொடங்கும் மேகதாது அணை விவகாரம்..!

    மேலும் படிங்க
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா

    செய்திகள்

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share