முதல்வர் ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் பங்கேற்று சிறப்பித்தார். பொங்கல் பண்டிகை தமிழர்களின் இதயத்தில் மிக ஆழமாக வேரூன்றிய திருநாள்.
இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. நமது முன்னோர்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்த வாழ்க்கை முறையின், உழைப்பின் மகிமையின், நன்றியுணர்வின் அழகிய வெளிப்பாடு. தை மாதம் பிறந்தால் வாழ்வில் வழி பிறக்கும் என்பார்கள். அந்தத் தைப்பிறப்பின் முதல் நாளில் தொடங்கி நான்கு நாட்கள் நீளும் இந்தப் பண்டிகை, வெறும் தேதிகளின் தொகுப்பு அல்ல.

அது ஒரு முழுமையான வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கியது. பொங்கல் என்பது வெறும் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல. அது இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி, உழைப்புக்கு மதிப்பு கொடுப்பது எப்படி, குடும்பத்தையும் உறவுகளையும் மதிப்பது எப்படி என்பதை நினைவூட்டும் ஒரு பெரிய பாடம். பொங்கல் திருநாள் கொண்டாட்டமானது வீடுகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் கலைக்கட்டும்.
இதையும் படிங்க: பற்றி எரியும் தி.குன்றம் விவகாரம்..!! திமுகவின் திட்டமிட்ட அரசியல் மோதலா..?? கிளம்பும் எதிர்ப்புகள்..!!
அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் பங்கேற்று உள்ளனர். அப்போது, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். அருகில் இருந்த சிறுவனிடமிருந்து முதல்வர் ஸ்டாலின் சிலம்பம் வாங்கி சுற்றியும் அசத்தினார். கொளத்தூர் தொகுதியில் பொங்கல் விழா களைகட்டியது.
இதையும் படிங்க: பார்த்து பேசுங்கய்யா..! யார் எழுதி கொடுத்தாலும் அப்டியே பேசுவீங்களா முதல்வரே? கிண்டலடித்த அண்ணாமலை...!