பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டு வாசலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தமிழக அரசியல் மற்றும் குற்ற உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே, சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
அன்றிரவே பொன்னை பாலு உட்பட எட்டு பேர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.பொன்னை பாலு என்பவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி. ஆற்காடு சுரேஷ் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினம்பாக்கத்தில் பகிரங்கமாகக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாக பொன்னை பாலு மற்றும் அவரது கும்பல் நம்பியிருந்தனர்.

பழிக்குப் பழியாகத்தான் ஆம்ஸ்ட்ராங்கை இலக்கு வைத்து திட்டமிட்டுக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால் போலீஸார் ஆம்ஸ்ட்ராங் அந்தக் கொலையில் நேரடியாகத் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தினர். இருந்தபோதிலும், பொன்னை பாலு இந்தப் பழிவாங்கல் உணர்வுடன் கொலைத் திட்டத்தை செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.கொலை நடந்த உடனேயே பொன்னை பாலு, திருவேங்கடம், அருள், திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, செல்வராஜ் ஆகியோர் முதல் கட்டமாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணை விரிவடைந்ததில் மொத்தம் 28 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். இதில் பொன்னை பாலு முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டார்.
இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் பிடிவாரண்ட்..! SI கிருஷ்ணகுமாரியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!
பொன்னை பாலுவின் தாயார் மரணம் அடைந்ததால் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தாயாரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக பொன்னை பாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐந்து நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை கவின் கொலை..! சிசிடிவி சமர்ப்பிக்க ஆணை..! மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு..!.