வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வரத்தாலும் ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டில் திறந்து விடப்படும் உபரி நீர் வரத்தால் கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு உபரி நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து 10500 கன அடியாக அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கான வரும் நீரின் அளவு 10,500 கன அடிலிருந்து 14,000 கனாடியாக உயர்ந்திருக்கிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 9,500 கண அடியாக இருக்கிறது.
மொத்தம் 35 அடியில் தற்போது 33 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. 3231 மில்லியன் கன அடியில் 2521 மில்லியன் கன அடியில் நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 9,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம்,கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம்,ஒதப்பை,நெய்வேலி,
எறையூர்,வெள்ளியூர், பீமன் தோப்பு கொரக்கந் தண்டலம், சோமதேவன்பட்டு,மெய்யூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம் ஆத்தூர் பண்டிகாவனூர், ஜெகநாதபுரம், புது குப்பம், கன்னிப்பாளையம், வண்ணிப்பாக்கம், ஆசூவன் பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர்
சடையான்குப்பம், எண்ணூர் ஆகிய கிராமங்களுக்கு நீர்வளத்துறை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது
இதையும் படிங்க: “உசுருக்கே ஆபத்தாகிடும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க..” - 30 கிராம மக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ துணி துவைக்கவோ செல்பி எடுத்து விளையாடவோ கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஆபத்து! ஆபத்து!!... குமரி மக்களுக்கு அபாய மணி... திரும்பிய திசையெல்லாம் எச்சரிக்கை ....!