சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்றும் அனைவரும் விருத்தி அடைய வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
இன்று முதல் உள்ளம் தேடி இல்லம் நாடு என்ற திட்டமும் கேப்டனின் ரத யாத்திரையும் தொடங்குவதாக தெரிவித்தார். தமிழ்நாடு முழுக்க நடக்க இருப்பதாகவும் கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை மூன்று கட்ட பயணமாக நடைபெறும் என்றும் கூறினார். முதற்கட்டமாக பயணம் என்று ஆரம்பித்து 23ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக கூறினார். அதன் பிறகு இரண்டாம் கட்ட பயணம் தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தன்னுடைய சுற்றுப்பயணம் தொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், திட்டுவதும் குறை சொல்வதும் மற்றும் அரசியல் இல்லை என்றும் இந்த முறை தன்னுடைய பிரச்சாரம் வேற மாதிரி இருக்கும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு வார்த்தையும் தமிழ் நாட்டுக்காகவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான பிரச்சாரமாகவும் இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா… இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே! திமுகவுக்கு தாவும் ஜெயக்குமார்? அரசியலில் பரபரப்பு

தாங்கள் எங்கு கூட்டணி வைக்கிறோமோ அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் எங்கள் பிரச்சாரம் அதை நோக்கி இருக்கும் எனவும் தெரிவித்தார். தேமுதிக அங்கம்பதிக்கும் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறிய அவர், கேப்டனின் கொள்கை மற்றும் இலட்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று தெரிவித்தார்.
தேமுதிக உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வரும்போது மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்றும் கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்பதாகவும் கூறிய பிரேமலதா, எத்தனை சீட்டு கேட்போம் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்பதற்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது என கூறினார்.
இன்றைக்கு தன்னுடைய பயணம் ஆரம்பிக்கிறது என்று கூறிய அவர், கேப்டன் இல்லாமல் செய்யும் முதல் சுற்று பயணம் இது என்றும் அதனால் கேப்டனுக்கு இலங்கை ஈழப் பெருமக்கள் வழங்கிய பரிசு தமிழக மக்களை ரத யாத்திரைகள் சந்திக்க வருகிறது., இது மக்களுக்கான பயணம் என்று கூறினார்
இதையும் படிங்க: மக்கள் தினமும் போராடிட்டு வராங்களா? வீண்பழி சுமத்துராரு... முதல்வரை சாடிய தமிழிசை