தமிழ் திரையுலகம் அரசியலுடன் இணைந்துள்ளது என்பது பழமையான உண்மை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற நட்சத்திரங்கள் திரைப்படத்தில் இருந்து அரசியல் ஆட்சியைப் பெற்றவர்கள். அந்த வரிசையில், 'கேப்டன்' என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் தனது ரசிகர் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சியைத் தொடங்கி, குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றார். இப்போது, தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய், 2024 பிப்ரவரியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியை உருவாக்கியுள்ளார்.
2009 முதல் தனது ரசிகர் அமைப்பான அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சமூக சேவைகளுக்காகப் பயன்படுத்திய அவர், 2021 உள்ளாட்சித் தேர்தலில் 169 இடங்களில் 115இல் வென்றது போல, ரசிகர்களின் வலிமையை நிரூபித்தார். 2024 பிப்ரவரியில் TVKவைப் பதிவு செய்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவரது படங்கள் மெர்சல், சர்கார், மாஸ்டர் போன்றவை ஊழல், கல்வி, சமூக பிரச்சினைகள் போன்றவற்றைத் தொட்டன. இது அரசியலுக்கு அடித்தளமாக உள்ளது.

விஜயகாந்த் போல அரசியலில் விஜய் தடம் பதிப்பார் என்று ஒரு சிலர் பேசி வரும் சூழ்நிலையில் விஜயகாந்திற்கு நிகர் அவர் மட்டுமே என்றும் கூறுகின்றனர். விஜயகாந்தை தனது அண்ணன் என மேடைகளில் விஜய் குறிப்பிட்டு பேசி வருகிறார். இதனிடையே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஜய் பிரச்சாரத்தில் சரியான திட்டமிடுதல் தேவை என்று குறிப்பிட்டார். ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வது சரியாக இருக்காது என்று கூறினார்.
இதையும் படிங்க: விஜய் எங்களுக்கு தம்பி தான்! இதுல என்ன டவுட்டு? பிரேமலதா ஓபன் டாக்..!
விஜயகாந்தை யாருடனும் ஒப்பிடாதீர்கள் என்றும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் தெரிவித்தார். குறுகிய நாட்களிலேயே அரசியலில் புயலைக் கிளப்பி எதிர் கட்சி தலைவராக வந்தவர் கேப்டன் என்றும் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர்., இதனை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்திற்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்..!