நாட்டின் நிர்வாக மையத்தின் அடையாளங்களை மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள முக்கியமான பகுதிகளுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பிரதமர் அலுவலக வளாகத்திற்கு இனி 'சேவா தீர்த்' (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களை உள்ளடக்கிய சென்ட்ரல் செகரட்டேரியட் பகுதி முழுமைக்கும் 'கர்தவ்ய பவன்' (கடமைக்கான மாளிகை) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களான ராஜ் பவன்களின் பெயர்கள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசின் உயர்மட்ட நிர்வாக மையங்களுக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தின் நெறிமுறைகளை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் ஆளுநர் மாளிகைகளான ராஜ் பவன்கள் இனி 'லோக் பவன்' (மக்களின் இல்லம்) என்று அழைக்கப்படும் என்றும், பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களின் பெயர்களும் மாற்றப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் பணிச்சுமை: உத்தரப் பிரதேச ஆசிரியர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் முறையாக அறிவிக்கப்பட்ட இந்த முடிவின்படி, தமிழ்நாட்டிலும் ராஜ் பவன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கவர்னர் மாளிகை (ராஜ் பவன்) உடனடியாக 'லோக் பவன், தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த மறுபெயரிடல் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ராஜ் பவன், லோக் பவனாக பிரதிபலிப்பதாகவும், இந்த நடவடிக்கை மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்திற்கான நீண்டகால உறுதிப்பாட்டையும், மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அதன் முயற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்பதையும் முன்னெடுத்துச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கலாசார பாரம்பரியம், நாகரிக மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலை நிறுத்தும் தொடர் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
ராஜ் பவன்களைத் தொடர்ந்து, மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.
பிரதமர் அலுவலகம் இனி 'சேவா தீர்த்' (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
மத்திய அரசின் அலுவலகங்களை உள்ளடக்கிய சென்ட்ரல் செகரட்டேரியட் பகுதி இனி 'கர்தவ்ய பவன்' என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்தப் பெயர் மாற்றங்களும், நிர்வாக அமைப்புகள் மக்களுக்கான சேவை மையங்களாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி: உள்நாட்டு வருவாய் சரிவுக்கு காரணம் என்ன?