• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குற்றவாளியைப் போல நடத்தினார்கள்! விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாக பேராசிரியர் கலையரசன் கடிதம்!

    எந்த முறையான ஆவணமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ காட்டாமல், அதிகாலை நேரத்தில் இரவு உடையில் வலுக்கட்டாயமாக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Author By Pandian Thu, 29 Oct 2026 12:36:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Professor Kalaiyarasan Alleges Police Harassment Over Fake Instagram Post Targeting TVK MLA Kamatchi

    சென்னை: பல்லாவரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜே. காமாட்சி குறித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட அவதூறு கருத்து தொடர்பாக, தன்னைத் தவறாக அடையாளம் கண்டு விசாரணை என்ற பெயரில் தாம்பரம் போலீசார் தன்னை துன்புறுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு காவல்துறைத் தலைவரிடம் பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் (MIDS) இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் கலையரசன், “திராவிட மாடல்” என்ற புத்தகத்தை எழுதியவர் ஆவார். புதன்கிழமை அதிகாலை அவரது வீட்டில் இருந்து சீருடை இல்லாத போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.⁠

    இதனிடையே, விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்தியதாகக் கூறி தமிழ்நாடு காவல்துறைத் தலைவருக்கு கலையரசன் புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது, சீருடை இல்லாத சில காவலர்கள் வீட்டின் கதவைத் தட்டி தனது பெயரைக் கேட்டதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    பல்லாவரம் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஜே. காமாட்சி தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் யாரோ அவதூறான கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பம்மலில் உள்ள டி4 சங்கர் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை தன்னிடம் கூறியதாகப் பேராசிரியர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

    FakeInstagram

    எந்த முறையான ஆவணமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ காட்டாமல், அதிகாலை நேரத்தில் இரவு உடையில் வலுக்கட்டாயமாக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    போலீஸ் வாகனத்திற்குப் பதிலாக வாடகை காரில் வந்த போலீசார், எனது செல்போனைப் பறிமுதல் செய்தனர். இருப்பினும், பலமுறை கோரிய பிறகு, தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க சில நிமிடங்கள் மட்டும் அலைபேசியைத் திருப்பித் தந்துள்ளனர்.

    பின்னர், தனது புகைப்படத்துடன் கூடிய போலிக் கணக்கில் இருந்து அவதூறுப் பதிவு இடம்பெற்றிருந்ததைக் காவலர்கள் காட்டியதாகவும், அதில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் பயனர் பெயர் வேறாக இருந்தது எனக் கூறியுள்ளார். அந்த எம்.எல்.ஏ-வைத் தனக்குத் தெரியாது என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் கலையரசன் மறுத்துள்ளார்.

    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தான் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தபோது, அங்கிருந்து தனது புகைப்படத்தை எடுத்து, இந்தப் போலியான கணக்கை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    முதலில் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய காவலர்கள், பல்லாவரம் அருகே வாகனத்தை நிறுத்தி சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் பலமுறை போனில் பேசிக் கொண்டே இருந்ததாகவும், சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, தன்னை வீட்டில் இறக்கிவிடுமாறு உத்தரவு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்ததாகக் கூறியவர், காலை 7.45 மணியளவில் அவரை அவரது இல்லத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

    அதற்கு முன்னதாக, அந்த இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கடிதம் எழுதி வாங்கிக்கொண்டுள்ளனர். இந்தச் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

    மேலும், குற்றவாளியைப் போல நடத்தப்பட்டதால் தான் மிகுந்த துன்புறுத்தலுக்கும் அவமானத்திற்கும் உள்ளானதாகக் கூறியுள்ள கலையரசன், இந்தச் சம்பவம் வெறும் போலிக் கணக்கு பதிவுடன் மட்டும் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும், தன்னைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தவர்கள் மற்றும் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான கணக்கை உருவாக்கியவர்கள் மீது தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். தனது குரலை ஒடுக்கவே இத்தகைய சட்டவிரோதச் செயல் அரங்கேற்றப்பட்டதாக கலையரசன் குற்றச்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: "மூலை முடுக்கெல்லாம் ஊரை அடித்து உலையில் போட்ட சொத்துகள்".! அன்புடன் எச்சரிக்கை.!! தவெக விமர்சனம்.!!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்
    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (31-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணம் செய்வது நல்ல பலன் தரும்..!!

    இன்றைய ராசிபலன் (31-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணம் செய்வது நல்ல பலன் தரும்..!!

    ஜோதிடம்
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    மாணவர்களுக்கு குஷியான செய்தி... குழந்தைகள் தினத்தன்று சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... எங்கே? எப்போது?

    அரசியல்
    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    மீண்டும் கெத்து காட்டிய இஸ்ரோ... விண்ணில் சீறிப்பாய்ந்தது GSLV-F18 ராக்கெட்... என்னெவெல்லாம் செய்யும் தெரியுமா?

    இந்தியா
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share