தெரு நாய்களை காப்பகங்களில் வைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு தீர்ப்பு திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் கூட தெருநாய்கள் தேவையா இல்லையா என்று வாதங்கள் நடந்து வருகிறது. தெரு நாய்கள் வேண்டாம் என்பவர்கள் பொதுவாக முன் வைக்கும் கருத்து என்னவென்றால், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதுதான்.
இருப்பினும் தெருநாய்கள் எல்லாமே அப்படி கிடையாது என்றும் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். தெரு நாய்களை ஒழிப்பது தங்கள் நோக்கம் அல்ல இருப்பினும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது. தெரு நாய்கள் தங்களுக்கு பாதுகாப்பு என்று ஒரு தரப்பினரும் தெரு நாய்களால் வெளியில் வரவே முடியவில்லை என்று மற்றொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.

ரேபிஸ் நோய் தாக்கி பலர் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எவ்வாறு காப்பாற்றப் போகிறீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. அப்போது, ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களுக்கு தனி காப்பகங்கள் அமைக்க உள்ளன என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பஞ்சாப் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
வெளிநாடுகளில் தெரு நாய் பிரச்சனை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வெளிநாடுகளில் என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து பின்பு பின்பற்றலாம் என்றும் காப்பகங்கள் அமைத்து ரேபிஸ் நோய் தாக்கிய நாய்கள் காக்கப்பட்டால் அந்த நாய்களுக்கு உணவு அளிக்கும் தைரியம் யாருக்கு உண்டு என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகம் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமனம்