டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு, சமூகத்தில் அவர்களின் தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இவ்விருதுக்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இவ்விருது பெறுவோர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.இவ்விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள் 15 ஆண்டுகள் உதவி ஆசிரியராகவோ அல்லது 20 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவோ சிறப்பாக பணியாற்றியிருக்க வேண்டும். மேலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வேலை நடக்குது! சென்னை மாநகராட்சி சொன்ன ஹாப்பி நியூஸ்…

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள், டியூஷன் எடுப்பவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் அல்லது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டார்கள். இந்த கடுமையான தேர்வு அளவுகோல்கள், விருதின் மதிப்பையும், அதைப் பெறும் ஆசிரியர்களின் தகுதியையும் உயர்த்துகின்றன.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ராதாகிருஷ்ணன் விருதை துறை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கு கௌரவிக்க உள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்க்கிறேன்! நெகிழ்ந்து பேசிய முதல்வர்