கடந்த சில நாட்களாக சென்னையில் கோடை வெயில் தீவிரமாக கொளுத்தி வந்த நிலையில், இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென இருள் சூழ்ந்து மழை பெய்தது. மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் தொடக்கத்தில் வெயில் உச்சத்தை எட்டியிருந்தது. பகல் நேரங்களில் 34 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவியது.
இரவு நேரங்களும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக கீழ்ப்பாக்கம், எழும்பூர், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், புதுப்பேட்டை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெயில் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளியில் பணிபுரிபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.இந்த நிலையில் இன்று காலை மற்றும் மதிய நேரங்களில் வானம் திடீரென மாறியது.

கருமேகங்கள் சூழ்ந்து இருள் பரவியதுடன், மிதமான மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவானது. இந்த திடீர் மழை சென்னை நகரை சற்று குளிர்ச்சியாக்கியது. வெயிலின் தாக்கம் தற்காலிகமாக குறைந்து, மக்கள் நிம்மதியான சுவாசத்தை உணர்ந்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தை குளுகுளுவென மாற்றப்போகும் மழை..!! உஷார் மக்களே..!! வானிலை அப்டேட்..!!
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!