இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை 34 படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரச திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது என்றும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் பாமக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிங்கள அரசு, அதன் அடுத்தக்கட்டமாகத் தான் படகுகளை சிதைத்து மூழ்கடிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது என சாடினார்.
இதையும் படிங்க: மோடி பேசிவிட்டு வந்த போதும் மீனவர்கள் மீது தாக்குதல்..! கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..!

2021-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான நான்காண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 174 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 34 படகுகளை அழிக்கத் திட்டமிட்டுள்ள இலங்கை அரசு, அடுத்தடுத்தக் கட்டங்களில் மீதமுள்ள படகுகளையும் அழிக்க முனையும் என்பதில் ஐயமில்லை என்றும் கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அத்துடன் இலங்கை அரசிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாமக மாநாட்டில் வெடித்த சர்ச்சை... அன்புமணி செய்த தரமான சம்பவம்!!