பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து இரண்டு துண்டுகளாக மாறியது. முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் ஆரம்பித்த பிரச்சனை இன்றுவரை ஓயவில்லை.
விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்ற வார்த்தையை ராமதாஸ் கூறியதில் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த தொண்டர்கள், தற்போது அன்புமணியை ஆதரிப்பதா ராமதாசை ஆதரிப்பதா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
காரணம் அன்புமணி தரப்பு ஒரு பிரிவாகவும் ராமதாஸ் தரப் ஒரு பிரிவாகவும் பிரிந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள், நடைபயணங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சி பதவியில் இருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை நீண்டு வருகிறது.
இதையும் படிங்க: ஓயாத சண்டை! அன்புமணிக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீதிமன்றத்தை நாட ராமதாஸ் தரப்பு முடிவு..!

இந்த நிலையில், அன்புமணி கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பாமகவில் அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழு, அவசர குழு, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அன்புமணி கூட்டம் உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒட்டு கேட்பு விவகாரம்.. ராமதாஸ் வீட்டு WIFI மோடம் போலீஸில் ஒப்படைப்பு.. தீவிர விசாரணை..!