சமூக வலைத்தள கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டிருக்கின்றன என்று அந்த புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைத்து முன்வைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் பாமாக்கா நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பாக தனது பெயரை அன்புமணி பெயருக்கு பின்னால் பயன்படுத்த கூடாது எனவும், தனது வீட்டின் அறையில் தனது பேச்சை ஒட்டு கேட்பதற்காக ஒட்டு கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டதாக அவர் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதை வைத்தது யார் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று காலையிலேயே ஆன்லைன் மூலமாக பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்திற்கு அளித்துள்ள புகார் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ராமதாஸ் உட்காரும் இடத்தில் ஒட்டு கேட்கும் கருவி... தைலாபுரத்தில் கைவரிசை காட்டியது இவரா? - பகீர் குற்றச்சாட்டு...!
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆன்லைன் வாயிலாக டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களிருந்து தனது சமூக வலைதல கணக்குகளை மீட்டு தரும்படியும், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளை மீட்டு தரக்கோரியும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரில் குறிப்பாக குறிப்பாக சமூக வலைதள கணக்குகளின் கடவுச்சொற்கள் மாற்றப்பட்டதாகவும், அந்த கடவுச்சொற்களை மீட்டெடுக்க தேவையான தகவல் வேறொருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: தேவைப்பட்டால் இனிஷியல் போட்டுக்கொள்... தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது! ராமதாஸ் தடாலடி..!