பாட்டாளி மக்கள் கட்சியில் நீண்டகாலமாக நிலவி வரும் உட்கட்சி மோதல், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேலும் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் நிறுவனரும் மூத்த தலைவருமான ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான அதிகாரப் போராட்டம், கூட்டணி தேர்வு, தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வெளிப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், 2026 தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவது தொடர்பான அன்புமணியின் அறிவிப்பும், அதனை ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்த்ததும் கட்சியின் பிளவை மேலும் ஆழமாக்கியுள்ளது. டிசம்பர் 2025 இல், பாமக தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்ட அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு கட்சியின் இளம் தலைமை மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்திய அதே வேளையில், ராமதாஸ் தரப்பில் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் கொண்டு வந்தது. அன்புமணியின் இந்த நடவடிக்கை கட்சியின் அதிகாரபூர்வமானது அல்ல என்று கூறி, அது வெறும் பண மோசடி நோக்கம் கொண்டது என்று ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது.
இதையும் படிங்க: ரொம்ப தப்பு...! அன்புமணியிடம் அதிமுக கூட்டணி பேசியது ஏற்புடையது அல்ல... ராமதாஸ் கண்டனம்..!
இன்று அதிமுகவுடன் பாமக கூட்டணி வைப்பதாக அன்புமணி அறிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திக்க இருப்பதாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்புமணியிடம் அதிமுக கூட்டணி பேசியது ஏற்புடையது அல்ல என ராமதாஸ் தெரிவித்ததாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பபவர்கள் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் விருப்பமுனுக்களை வழங்கலாம் என ராமதாஸ் அறிவித்துள்ளார். விருப்ப மனுக்களை தைலாபுரம் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருப்பமானுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் பெற்றுக் கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு...! ராமதாசை சந்திக்கும் சி.வி சண்முகம்..!