ராமநாதபுரத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி சமத்துவநாள் விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோ கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அனைவருக்கும் இலைப்போட்டு உணவு விருந்து கொடுக்கப்பட்ட நிலையில், துப்புரவு பணியாளர்கள் மட்டும் ஒதுக்கப்பட்டதாக பெண்கள் புகார் தெரிவித்தனர். எங்க வீட்ல சமைச்சு சாப்பிட முடியாதா? எதற்காக எங்களை வர சொன்னீர்கள்? காலை 8 மணிக்கு வந்ததாகவும், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இலை போடாமல் காலம் தாழ்த்தி அலட்சியப்படுத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், தங்களுடைய முகவரியில் வேறு ஒருவரின் புகைப்படத்தை சேர்த்து வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ஹூரியத் பிரிவினைவாத அமைப்பிலிருந்து 3 அமைப்புகள் விலகல்.. மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு..!
இதையும் படிங்க: 3 கோடி டன் பால் உற்பத்திக்கு இலக்கு.. உலகிலேயே இந்தியாவை முதல் நாடாக்க மத்திய அரசு உறுதி..!