ரணில் விக்ரமசிங்கே 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019 மற்றும் 2022 ஆகிய காலகட்டங்களில் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்தார். குறிப்பாக, 2022இல் இலங்கை பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் குழப்பம் நிலவிய வேளையில், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் இடைக்கால ஜனாதிபதியாக 2022 ஜூலை முதல் 2024 வரை பதவியேற்றார்.
இந்தக் காலகட்டத்தில், இலங்கையின் பொருளாதார மீட்புக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, நாட்டின் நிதி நிலைமையை ஓரளவு உறுதிப்படுத்த முயற்சித்தார். இருப்பினும், அவரது ஆட்சிக்காலம் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டது.
முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: என்ன ஆச்சு? கைதான ரணில் விக்ரமசிங்கே மருத்துவமனையில் அனுமதி! தொடர் சிகிச்சை...

கைதுக்கு பின்னர், அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 26, 2025 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.
இதனிடையே, அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாக சசிதரூர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு அவரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோத சூதாட்ட வழக்கு.. கையும் களவுமாக சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!!