டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை தமிழகத்தில் இரு முறை சோதனை நடத்தியுள்ளது. சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரத்தீஷ், பராசக்தி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை குறி வைத்து இந்த சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் ரத்தீஷ் திமுக இளைஞரணி தலைவரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் யார் அந்த ரத்தீஷ்? திமுகவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? உதயநிதி ஸ்டாலினுடன் எப்படி நெருக்கம் ஏற்பட்டது? டாஸ்மாக் மேலாண் இயக்குனருக்கு மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிடும் அளவிற்கு அவர் செல்வாக்கு பெற்றவரா? என பல கேள்விகளை அதிமுக எழுப்புகிறது. மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் அதிமுகவினர் யார் அந்த தம்பி? என தமிழக முழுவதும் போஸ்டர் அடித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: லண்டனில் இந்தியர்கள் போராட்டம்..! பாக். தூதரக அதிகாரியின் அகங்கார செயலால் பதற்றம்..!

இந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரம், தொழிலதிபர் ரத்தீஷின் மர்மமான தலைமறைவு. அரசியல் மற்றும் அதிகார மையங்களில் "தம்பி" என்று அன்போடு அழைக்கப்பட்ட ரத்தீஷ், திடீரென துபாய் வழியாக லண்டனுக்கு தப்பி ஓடியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் புயலை கிளப்பியுள்ளது.
ரத்தீஷ், முக்கிய அரசு அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் என்றும், அவரது செல்வாக்கு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அவரது வீடு அமலாக்கத்துறை (ED) அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதாகவும், ED விசாரணைக்கு பயந்து அவர் தப்பியோடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பரபரப்பான கேள்வி என்னவென்றால், ரத்தீஷை லண்டனுக்கு கூட்டிச் சென்ற அந்த VIP யார்?, சிலர் இதற்கு பின்னால் திமுகவின் "லண்டன் சிண்டிக்கேட்" இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மற்றொரு தகவல், IPS அதிகாரி சர்வேஷ் ராஜின் மனைவி அமானத் மான் இதில் தொடர்புடையவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ED தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ரத்தீஷின் தலைமறைவும், அவருடன் தொடர்புடைய முக்கிய நபர்களும் தற்போது விசாரணை வெளிச்சத்தில் உள்ளனர். இந்த விவகாரம் எப்படி முடியும்? உண்மை வெளிவருமா? தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை.. EDக்கு இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!