தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக வரும் நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு வடமேற்காக நகரக் கூடும் என கணிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளுத்து வாங்கி வருகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கும் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…! அப்போ சென்னைக்கு?
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! உஷார் மக்களே..!!