திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது காரை ஓட்டிச் சென்ற ரிதன்யா தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார்.

தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: உங்க சண்டைல அந்த பிஞ்சு குழந்தைங்க என்னம்மா பண்ணுச்சு.. ஆத்திரத்தால் நேர்ந்த சோகம்.. உருக்குலைந்த குடும்பம்..!

இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். உடல் நிலையை காரணம் காட்டியதால், ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.

இதனிடையே, சித்ராதேவிக்கு உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் பொய் கூறுவதாகவும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாமியார் சித்ரா தேவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரிதன்யாவின் கணவர், மாமனார் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது குற்றவாளியாக மாமியாரையும் போலீசார் கைது செய்தனர். தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட மாமியார் சித்ராதேவி, சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: மூன்று தலைமுறையை அழித்த கள்ளக்காதல்... 65 வயது பாட்டி முதல் 5 வரை குழந்தை வரை ஒரு குடும்பமே காலி...!