தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது முதல் திமுக தரப்பில் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, இந்த அரசு நிலையற்றது என்றும், ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யாது என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பி ஆட்சி நடைபெறுவதாகவும், எந்த நேரத்திலும் அரசு வீழலாம் என்றும் திமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே இந்த அரசு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் முடிவுக்கு வரும் என்ற கணிப்புகளைத் திமுக தரப்பில் வெளியிட்டனர்.நிர்வாகத் திறன் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டுகின்றனர்.

வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது என்று சென்னை காரம்பாக்கத்தில் நடந்த விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சாபம் வெட்டுள்ளார். மா சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது என்றார். இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள் எனவும் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!
ஐந்தாண்டுகள் ஓய்வெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.மாசுபிரமணியனை கொண்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி கிடைத்ததாக தெரிவித்தார். கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டதாக வாக்காளர்களை ஆர்.எஸ் பாரதி அவமானப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி..! கூச்சமே இல்லாம காலில் விழுவாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்.!!