தமிழ்நாட்டில் பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. 2011-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய 'புதிய உயிர்' திட்டத்தின் கீழ், கிராமப்புற 10-19 வயது பெண் குழந்தைகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டன. இது இந்தியாவிலேயே முதல் மாநில-நடத்திய திட்டமாக இருந்தது. இதன் மூலம் 41 லட்சம் பெண் குழந்தைகள், 7 லட்சம் புது தாய்மார்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பயனடைந்தனர்.
இந்த நாப்கின்கள் அரசு மருத்துவமனைகள், முதன்மை சுகாதார நிலையங்கள், கிராம சுகாதார உபநிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டம் பள்ளிகளுக்கும் கிராம சுகாதார மையங்களுக்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டது. ரேஷன் கடைகள் போன்ற பொது விநியோக அமைப்புகளை உள்ளடக்கவில்லை. 2020-ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதும், இலவச நாப்கின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏழை குடும்பங்களின் பெண் குழந்தைகள் தங்கள் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கு போதுமான வசதிகளை இழந்தனர்.

இதன் விளைவாக துணிகள் பயன்படுத்துதல் போன்ற பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையை சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உணர்ந்து, சானிட்டரி நாப்கின்களை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையிலோ அல்லது இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: டிச.16 முதல் காலவரையற்ற போராட்டம்.. கோரிக்கை நிறைவேற்றுங்க! டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு..!
ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்தபோது,டிசம்பர் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மூன்று துறைகளின் செயலாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் நீரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு