பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த ஐந்து மாத காலமாக பணியில்லாமல் பல்வேறு தூய்மை பணியாளர்கள் இருவரும் சூழல் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராயபுரத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஐந்து மாதமாக ஊதியம் கிடைக்காமல் பணி இல்லாமல் அவர் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் கால் மற்றும் வயிற்றில் புண் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ரவிக்குமார் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதுதாங்க தங்க மனசு...!! - குப்பைத் தொட்டியில் அழுக்கு தலையணைக்குள் கொத்து கொத்தாய் கிடந்த தங்க நகைகள்... உடனே தூய்மை பணியாளர் செய்த காரியம்...!
தூய்மை பணியாளராக 11 ஆண்டுகளாக பணியாற்றிய ரவிக்குமார் ஆறு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் விரத்தியில் விபரீத முடிவு எடுத்ததாகவும் தூய்மை பணிகளை தனியார் மையமாக்கும் விவகாரத்தால் விரக்தியில் ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 50 வது வாரில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிக்குமார் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக மதவெறியால் ஒரு உயிரே போச்சு... எறிவது தீபத்தூண் அல்ல தமிழர்கள்... நயினார் கண்டனம்...!