உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஊதியம் வழங்கவில்லை என்றும் குப்பை அல்லுவதற்கு உரிய உபகரணங்கள் வழங்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 75க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு அவர் லேண்ட் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் டெண்டர் எடுக்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் இதுவரையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றும், தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, குப்பை அள்ளும் உபகரணங்கள் மற்றும் வார்டுகளுக்கு செல்லும் தள்ளு வண்டிகள் உள்ளிட்ட போதிய உபகரணங்கள் எதுவும் நிறுவனத்தின் சார்பில் வழங்காததால் தெருக்களில் உள்ள குப்பை அள்ளுவதில் சிரமம் ஏற்படுவதாகவும், கையுறை வழங்காததால் வெறும் கையால் குப்பைகளை அல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!
வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாலும் அதை சரி செய்து கொடுப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 70 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பழைய பேரூராட்சி அலுவலகம் எதிரில் அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்ய வேண்டும் என்றும் நேரடியாக நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஊமைப் பணியாளர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 15 நாட்களாக காத்திருப்பு... உறுதியளித்த அமைச்சர்கள்..!! தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்..!!