தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழகத்தில் முன்பை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் குற்றசம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சிக்கு வந்த 38 நாட்களில் 150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள், பெண்களுக்கு எதிராக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.
குறிப்பாக பெரும்பாலான பாலியல், மோசடி மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைதாகி வருவது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக முதலமைச்சர் விஜய் அமைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையே இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக நிர்வாகியை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. துரைமுருகன் தனது சோசியல் மீடியா பக்கத்தில், “திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் கைது ! நாமக்கல்லில் இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது புகார் ! பாழாய்ப் போன ஆட்சி பாலியல் கொடுமைகளே சாட்சி !” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்... அதை ஆளுநர் வாயாலேயே சொல்ல வச்சிட்டாரே...!!

நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளையம் பிரிவு சாலை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற மாசிலாமணி என்ற பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து காரில் ஏறச் சொல்லி கையை பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தியதோடு, சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக குமரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக திருச்செங்கோடு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் நவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த மாசிலாமணி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (24) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக வெற்றி கழக கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் இன்று தமிழகத்தையே பரபரப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!