தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று இந்தச் சட்டசபைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தலைமையில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இந்த அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பில் மகளிருக்கு மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயணம், தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதில் தாய்மாமன் சீராக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுக் குடிப்பகங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் இது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தமிழக அரசு அளிக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும். இதைவிடப் பெரிய பரிசு என்றால் அது பூரண மதுவிலக்கே தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உண்மையான தாய்மாமன் சீராக அமையும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் போராட்டம்..! போர்க்கொடி தூக்கிய வேல்முருகன்..!
பெண்களின் போராட்டம் குடிப்பழக்கம் உள்ள கணவனுக்காக மட்டும் இல்லை என்று கூறியுள்ள அவர், தங்கள் மகனுக்கும் இப்பழக்கம் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தினால்தான். எனவே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று இந்தச் சட்டசபைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!