சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்னலையில் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருந்துள்ளார். வீட்டில் சொன்னால் படிப்பு நின்று விடுமோ என அஞ்சி மாணவி இது குறித்து வெளியில் கூறாமல் இருந்துள்ளார். தொடர்ந்து அந்த இளைஞர் மாணவியிடம் மிரட்டலில் ஈடுபட்டதை அடுத்து, மாணவி தரப்பிலிருந்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு தரப்பினரையும் காவலர்கள் காவல் நிலையம் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இளைஞர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி வழக்கம் போல், பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது காதலிக்க வற்புறுத்திய இளைஞரின் சகோதரியும் அதே பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: போலீசை தாக்கி விட்டு தப்பிய ரவுடிகள்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்.. மதுபோதையில் இருந்தவர்களுக்கு மாவுக்கட்டு..!
அப்போது அந்த இளைஞரின் சகோதரி மாணவியிடம் தனது அவரது அண்ணனை திருமணம் செய்து கொள்ளும்படியும், வழக்கிலிருந்து மீட்கும் படியும் கூறியுள்ளார். தொடர்ந்து இது போன்ற மிரட்டலுக்கு உள்ளான மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து தகவல் அறந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்குறைவிற்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தூண்டுதலுக்கு காரணமான இளைஞரின் தந்தையை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இளைஞரையும் அவரது சகோதரியையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
முன்னதாக இளைஞர் அவரது தந்தை மற்றும் சகோதரி உட்பட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டினுள் நுரை தள்ளி உயிரிழந்த தம்பதியினர்.. விசாரணையை தீவிரபடுத்திய போலீசார்!