அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50% வரிகளால் இந்தியாவின் ஜவுளித் துறை பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது மொத்தம் 50% வரியை விதித்ததற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. இது நியாயமற்றது என்று இந்தியா வர்ணித்துள்ளது. இதனுடன், வரியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பிற விருப்பங்களையும் இந்தியா பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.
டிரம்பின் வரித் தாக்குதலால் லட்சக்கணக்கான மக்களின் வேலை ஆபத்தில் உள்ளது. அமெரிக்க ஆர்டர்களில் குறைவு ஏற்பட்டால், அதன் தாக்கம் உற்பத்தியில் காணப்படும், இது வேலைவாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும். எனவே இப்போது இந்திய அரசாங்கம் அமெரிக்க சந்தைக்கு மாற்றாக சுமார் 40 சந்தைகளுக்கு, அதாவது பிற நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கா விதித்த தண்டனையான 50 சதவீத இறக்குமதி வரியின் தாக்கத்தைக் குறைக்க, பிரிட்டன், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 40 முக்கிய நாடுகளின் சந்தைகளை அணுக இந்தியா தனது ஜவுளி ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் அதன் இருப்பை விரிவுபடுத்துவதே 40 புதிய நாடுகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கமாகும்.
இதையும் படிங்க: காற்று மாசால் குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்.. ஆய்வில் வெளிவந்த ஷாக் தகவல்..!!
இந்த நாடுகளின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதி 590 பில்லியன் டாலர் மதிப்புடையது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. தற்போது, இந்த சந்தையில் இந்தியா 5-6 சதவீத பங்கை மட்டுமே கொண்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வரும் நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு பலே ஐடியாவை கையில் ஆகஸ்ட் 27 முதல் அமல்படுத்தப்பட்ட 50 சதவீத அமெரிக்க வரியால் இந்தியாவிற்கு 48 பில்லியன் டாலர்களுக்கு மேல் வணிக இழப்பு ஏற்படும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.
ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (AEPC) கருத்துப்படி, ஜவுளித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு 10.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்த துறை இது என்று கூறப்படுகிறது.
ஆனால் உலக அளவில் ஐவுளி இறக்குமதி சந்தை 800 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது. ஒரு கதவை அடைத்தால் மறு கதவு திறக்கும் என்பது போல் அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு தண்டனையாக என நினைத்த 50 சதவீத வரி விதிப்பு, தற்போது இந்தியாவை ஐவுளி ஏற்றுமதி துறையில் வேற லெவலுக்கு உயர்த்த உந்துதலாக அமைந்துள்ளது. இதுவரை உலக அளவிலான ஐவுளி இறக்குமதி சந்தையில் வெறும் 4 புள்ளி 1 சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் இருந்து வந்த இந்தியா, தற்போது மத்திய அரசு 40 நாடுகளுடன் எடுத்து வரும் பேச்சுவார்த்தையால் கிடுகிடுவென முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட்... ரன்வேயில் இருந்து யூடர்ன் அடித்ததால் பரபரப்பு... 130 பயணிகளின் பரிதாப நிலை..!