இன்றைய இந்திய சமூகத்தில், குறிப்பாக நகர்ப்புறங்களிலும் சில கிராமப்புறங்களிலும், பள்ளிப் பருவத்திலேயே மது மது அருந்தும் பழக்கம் பரவத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். பத்து-பதினொரு வயதிலிருந்தே சில சிறுவர்களும் சிறுமிகளும் மது, சிகரெட், போதைப் பொருள்களைத் தொடத் தொடங்குகின்றனர்.
முன்பெல்லாம் மது அருந்துதல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரிய ஆண்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் மாணவிகளிடமும் இந்தப் பழக்கம் வேகமாகப் பரவியிருக்கிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களில் நடத்தப்பட்ட சில தனியார் ஆய்வுகளின்படி, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளில் 18 முதல் 35 சதவிகிதம் பேர் ஒரு முறையாவது மது அருந்தியிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்தப் போக்கிற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.

பல பள்ளி மாணவிகள் மது அருந்துவதை “ஸ்ட்ரெஸ் ரிலீஃப்” என்று நியாயப்படுத்துகிறார்கள். பிளஸ்-டூ தேர்வு அழுத்தம், பெற்றோரின் எதிர்பார்ப்பு, காதல் தோல்வி, தோழிகளுடனான போட்டி இவையெல்லாம் மது அருந்துவதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. சிலர் வீட்டில் அப்பா-அம்மா குடிப்பதைப் பார்த்துத்தான் நாங்களும் கத்துக்கொண்டோம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். இதன் விளைவுகள் மிகவும் கொடுமையானவை.
இதையும் படிங்க: முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு மது விற்பனை... சவுதி அரசு எடுத்த பரபரப்பு முடிவு...!
பாளையங்கோட்டை அருகே பள்ளியில் ஆறு மாணவிகள் மது குடித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவிகள் மது குடிக்கும் வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்கூட்டியே கணித்தார் சவுக்கு சங்கர்!! அதிகாலை வீட்டிற்கு வந்த போலீஸ்!! அதிரடி கைது!