கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் தோன்றிய 'டிட்வா' புயல், இலங்கை கடற்கரைப் பகுதிகளைத் தொட்டு, வடக்கு வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி வேகமெடுத்து நகர்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இந்தப் புயல் நவம்பர் 29-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களின் கடற்கரையைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம், கனமழை மற்றும் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.

புயலின் மையம் சென்னைக்கு தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் நிலையில், அதன் வேகம் மணிக்கு 10 கி.மீ. ஆக உயர்ந்துள்ளது. இந்தப் புயல், வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் வடமாகாணத்தின் நிலப்பகுதியைக் கடந்து, தமிழகத்தை அணுகுவதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் தாக்கம் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: நாகை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விடுமுறை... முழு விவரம்...!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING மிரட்டும் ‘டிட்வா’; விரட்டும் கனமழை - இந்த தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...!