சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விதிகளை மீறி தமிழ்நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட அளவினை விடவும் அதிகமாக பாறைகளை வெட்டி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும், அது குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் கொடூரமாக கொல்லப்படுவதையும் தடுக்கத்தவறி திமுக அரசு வேடிக்கைப்பார்ப்பதே இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க அடிப்படை காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயா எங்க வீடெல்லாம் போய்டுச்சு..! சீமானிடம் அழுது புலம்பிய அனகாபுத்தூர் மக்கள்..!

கனிமவளக் கடத்தல்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, புகாரளிப்பவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையலடைப்பது மற்றுமொரு பெருங்கொடுமை என்றும் இயற்கையின் எல்லா வளங்களையும் சுரண்டி விற்று அழித்து முடித்துவிட்டு வருங்காலத் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டு போகப்போகிறோம் என்ற கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கியூஆர் கோட் மூலம் திரள் நிதி வசூலிப்பு.. நாம் தமிழர் கட்சியினர் புகைப்படம் வைரல்!!