அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்தார். இதனை சீமான் நிராகரித்து உள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது என்றும் நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது, நாங்கள் நீராக இருப்போம் எனவும் கூறினார். திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான் என்றும் தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதற்காக தேவை என்பதை யாராவது சொல்லுவார்களா என கேட்டார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா என கேள்வி எழுப்பிய அவர், இந்திய நிலப்பரப்பில் 81% தமிழ்நாட்டில் தான் உள்ளது, இங்கு நிலத்தின் அடியில் உள்ள பலத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என்றார்.

மாறி மாறி ஆளும் ஆட்சியாளர்கள் இந்திய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என்றும் மண்ணுக்கும் மக்களுக்குமான தேவைகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்றி இருந்தால், அந்த கட்சிகள் இந்த நிலத்திற்கு வர வேண்டிய அவசியம் ஏன் உருவாகிறது என்ன கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி! சீமான் திட்டவட்டம்.. இபிஎஸ் அழைப்பு நிராகரிப்பு..!
மேலும், இந்தியை திணித்தது யார், கல்வி மாநில உரிமை எடுத்துக் கொண்டு போனது யாரு, அப்போது அதிகாரத்தில் இருந்தது யார், மருத்துவத்தை பொதுப்பட்டியலில் கொண்டு சென்றவர்கள் யார், மொத்த வரியையும் சரக்கு மற்றும் சேவை வரி எனக் கொண்டு சென்றவர்கள் யார், நீட் தேர்வை திணித்தது யார், அதை எதிர்க்காமல் கையெழுத்து போட்டு வரவேற்றது யார் என்ன சரமாரியாக கேள்விகளை முன் வைத்தார். TNPSC தேர்வில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கையெழுத்து போட்டவர்கள் யார் என அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் முன்வைத்தார்.
இதையும் படிங்க: பெண் கொடூர கொலை... கையறு நிலையில் குழந்தைகள்! அரசு கரம் கொடுக்க சீமான் வலியுறுத்தல்...