நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேனி வனப்பகுதியில் இன்று ஆடு, மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மதுரை மாவட்டம் விராதனூரில் ஜூலை 10 அன்று நடைபெற்ற "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற தலைப்பிலான ஆடு-மாடுகள் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில், வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006-ன் கீழ் மேய்ச்சல் உரிமைகளை வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும், மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தப் போராட்டம், மேய்ச்சல் நிலங்கள் மீதான உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும், கால்நடைகளை வளர்க்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்த மாநாட்டில், மேய்ச்சல் நிலங்களை மீட்கவும், கால்நடை வளர்ப்போரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006-ன் கீழ் மேய்ச்சல் உரிமைகளை உறுதி செய்யவும், மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: அனுமதியின்றி மாடு மேய்க்கும் போராட்டம்...சீமான் கைது? போலீசார் குவிப்பு
இந்த நிலையில், தேனியில் இன்று நடைபெற்ற மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தின் மேடையில் பேசிய சீமான் தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக குற்றம் சாட்டினார்.
இலங்கையில் நடந்ததும் தமிழகத்தில் நடப்பதும் ஒன்றுதான் என்று கூறிய அவர், இலங்கையில் குண்டு வீசி இனப்படுகொலை செய்தார்கள்., தமிழகத்தில் குடிக்க வைத்து இனப்படுகொலை செய்வதாக சாடினார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்று லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
கூறிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டிய இழுத்துக் கொண்டிருக்கின்றன என்றும் மாடுகளுக்கு போராடத் தெரியவில்லை எனவும் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளில் இந்த நாட்டையே மாற்றிக் காட்டப் போகிறோம் என்றும் சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சாதிய ஆணவப் படுகொலை! வாக்கரசியலுக்காக அம்போனு விடுவீங்களா?சீமான் ஆவேசம்