ஜி.வி. பிரகாஷ் குமார், தமிழ் திரையுலகில் ஒரு பன்முகக் கலைஞராக விளங்குபவர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.
இவரது இசைப் பயணம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, ஜி.வி. பிரகாஷ் குமார் ‘வாத்தி’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார்.
இது அவருக்கு இரண்டாவது தேசிய விருதாகும், இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக இதே விருதைப் பெற்றிருந்தார். இந்த சாதனை, அவரது இசைத் திறமையையும், தமிழ் சினிமாவில் அவரது தாக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இதையும் படிங்க: தடையை மீறிய சீமான்... வனப்பகுதிக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர்! திக்குமுக்காடிய வனத்துறை

இந்த நிலையில், தேசிய விருது வென்றுள்ள ஜீவி பிரகாஷுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாத்தி திரைப்படத்துக்கு நெஞ்சை உருக்கும் இன்னிசை அமைத்ததற்காக
அன்பு இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் இரண்டாவது முறையாக இந்திய அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை வென்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
காலத்தால் அழியாத காவியப் படைப்புகள் பல தந்து, தம்முடைய கலைப்பயணத்தில் செல்லும் திசையெல்லாம் இசையால் வெல்லும் இசைத் தமிழன் என்று புகழ்ந்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இன்னும் பல உயரிய விருதுகள் வென்று மக்கள் மனங்களை ஆண்டிட நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் என்றும் சீமான் வாழ்த்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் நடப்பது இனப்படுகொலை! இலங்கையை ஒப்பிட்டு சீமான் பகிரங்க குற்றச்சாட்டு...