ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் எம்பி சத்யபாமா இருந்து வருகிறார். அதன்படி செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட இதர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: #BREAKING: 1000 பேர் கூண்டோடு ராஜினாமா! என்னதான் நடக்குது அதிமுகவில்? இபிஎஸ் செம ஷாக்…
அதிமுகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவியை ராஜினாமா செய்ய கடிதத்துடன் வந்தனர். செங்கோட்டையனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரமான செயல் என்றும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு ஆதரவளிப்பதாகவும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செங்கோட்டையன் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். அது மட்டுமல்ல அது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் அதிக அளவில் திரண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அல்லது அண்டை மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் செங்கோட்டையன் வீட்டின் முன்பு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதையும் படிங்க: தலைக்கு மேல் தொங்கும் கத்தி! செங்கோட்டையனை ஆதரிக்கும் Ex. MPக்கு ஆப்பு வைத்த இபிஎஸ்