நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு 2022 ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உதகை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மீது டிடிவி தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒரு நாள் கூட சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுக்காதவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் நான் இந்த தொகுதியில் சிற்றரசரை போல வாழ்ந்ததாகவும் எதுவும் செய்யவில்லை என்று ஈபிஎஸ் பேசி இருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக அமர்த்தபட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கொல்லைப்புறமாக முதலமைச்சராக ஆனவர் என்றும் தெரிவித்தார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் பீ டீமாக இருப்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய செங்கோட்டையன், எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர் தான் இபிஎஸ்… செங்கோட்டையன் கடும் விமர்சனம்…!
இந்த நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளிடம் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை நடத்தினார். கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு மனு கொடுக்க உள்ளதாகவும், அது தொடர்பாக ஆலோசித்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு இபிஎஸ் முக்கிய ஆலோசனை... கூடியது அதிமுக மா. செ. கூட்டம்...!