தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி மோதல்களும் பிளவுகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக முக்கிய தலைவர்களான வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன், மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியோ அல்லது வெளியேற்றப்பட்டோ இருக்கின்றனர்.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து மீண்டும் வலுப்பெற்று வருகிறது. இந்தக் கருத்து, கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மனம் திறந்து பேச போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுகவிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ஆட்சி அரியணையில் ஏற முடியும் எனவும் தெரிவித்தார். அது மட்டுமல்லாது 2024-ல் பாஜகவோடு கூட்டணி அமைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் என்று சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என பெயர் குறிப்பிடாமல், பொதுவாக விலகியவர்கள் என்று குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ஒத்துமையா இருந்தா திமுகவை வீட்டுக்கு அனுப்பிடலாம்! செங்கோட்டையன் பேச்சை ஆமோதித்த நயினார்…
எந்த பொறுப்பும் தேவையில்லை என்கிறார்கள் என்றும் அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில் முக்கியமாக பார்க்கப்படுவது என்னவென்றால் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில், தான் மனம் திறந்து பேசப் போவதாக அறிவித்த உடனேயே சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாது அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துக்கு ஓ.பன்னீர் செல்வமும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, யாருடைய தூண்டுதலின் பேரில் செங்கோட்டையின் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனமும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: என்னடா பண்ணி வச்சுருக்கீங்க!! டென்சனான செங்கோட்டையன்.. பிரஸ்மீட்டில் களேபரம்!!