காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர். இந்த பிரச்சனை நீடித்து வரும் நிலையில் தமிழ்நாடு தான் அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க: தென்மேற்கு பருவமழை ஏற்பாடுகள்.. அனைத்திற்கும் தயார்..!! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!
இருப்பினும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எந்த காலத்திலும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் விஜய் சட்ட ரீதியாக இதனை சந்திப்பார் எனவும் தெரிவித்தார். 15 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கும் நிலையை மாற்றி எங்கு குழாய் திறந்தாலும் குடிநீர் கிடைக்க செய்வதை அரசின் இலக்கு என கூறினார்.
இதையும் படிங்க: இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!