ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார்.
திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் முன் ஜாமின் கிடைத்தது.
இதையும் படிங்க: இன்னும் சரண்டரே ஆகல.. அதுக்குள்ளயா..? செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!
குதிரை பேர வழக்கில் முன்ஜாமீனுக்கான நீதிமன்றத்தின் நிபந்தனை தொகையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செலுத்தினார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி செந்தில் பாலாஜி முன்ஜாமின் பெற்றார். சொந்த ஜாமீனுக்கான 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இதே தொகைக்கான இருநபர் ஜாமீனையும் செலுத்தி உள்ளார். பிணையை பெற்றுக் கொண்ட நீதிபதி நாளை முதல் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிஞ்சது..? அரசுப்பணி சரிதான்... அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!