நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை பதிவு செய்வதற்காக ஆதார் கார்டு தேவைப்பட்டுள்ளது. அப்பொழுது ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுப்பதற்காக நெல்லை பேட்டை அரசு மருத்துவமனை எதிரே உள்ளஆ ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அதன் உரிமையாளர் அஷ்ரப் அலி அப்பொழுது அங்கே இருந்து உள்ளார்.
அவரிடம் இளம்பெண் ஆதார் கார்ட் கொடுத்து இதை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுங்கள் என்று கூறியுள்ளார். அவரும் ஜெராக்ஸ் எடுக்க வேலையை தொடங்கி இருக்கிறார். அந்த நேரத்தில் இளம்பெண் கவனிக்காத நேரத்தில் அந்தப் பெண்ணை அசரப் அலி தனது அலைபேசியில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.
சட்டென இதை கவனித்த அந்த இளம் பெண் தனது கணவருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவரும் சம்பவ இடத்திற்கு வந்து அசரப் அலியிடம் கேட்டுள்ளனர். உடனே அச்சமடைந்த அசரப் அலி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து வேட்டை காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: “மாதவிடாய்-னு சொல்லியும் என்னை...” - காவல் நிலைய பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்...!
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் அஷ்ரப் அலியை கைது செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையா?... சல்லி, சல்லியாய் நொறுங்கிய எலும்புகள்... வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்...!